Wednesday, December 17, 2008

மார்கழித் திங்கள்

கலிபோர்னியாவிலிருந்து க்ரோம்பேட்டை வரை மார்கழி மாசம் சங்கீத விழா எடுக்கும்போது, அவ்யுக்தாவில் விழா எடுத்தால் எப்படி இருக்கும். சிரமமே இல்லாமல், யூ-ட்யூபில் இருந்து தேடிப் பிடித்து, சில முத்தான பாடல்களை இந்த டிசம்பர் சீஸனில் போஸ்ட் செய்வதாக உத்தேசம்.

வழக்கமான ஆரம்பமாக, "மார்கழித் திங்கள்" என்ற ஆண்டாள் அருளிய திருப்பாவையின் முதல் பாடலை "ஜெயா டி.வி" யிலிருந்து சுட்டு எடுத்து யாரோ யூ-ட்யூபில் செறுகிய வீடியோவை, நான் சுட்டு இங்கே பேஸ்டிருக்கிறேன்.




மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச்செல்வ சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்
ஏரார்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப்படிந்தேலோரெம்பாவாய்
-------

அடிக்கடி கேட்டதாலோ, அல்லது சங்கமம் படத்தில் வந்ததாலோ, இந்தப் பாடல் செல்ஃப் எக்ஸ்ப்ளனேட்டரியாகத் தெரியும். தெரியாதவர்களுக்கு, ஒரு சின்ன முன்னுரை.

திருப்பாவை என்பது ஆண்டாள் என்பவரால் எழுதப்பட்ட முப்பது பாடல்களின் தொகுப்பு. (ஆண்டாள் - சிறுகுறிப்பு). கௌதம் மேனனின் "வாரணம் ஆயிரம்" என்ற டைட்டில், இவர் பாடலிலிருந்து சுடப்பட்டது.

மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பாடல் என்ற கணக்கில் முப்பது பாடல்களைக் கொண்டது திருப்பாவை. நாராயணனின் பெருமைகளை அழகிய உவமைகள், உருவகங்களுடன் கச்சிதமான வளமான பாடல்கள் கொண்ட தொகுப்பு இது. இதன் முதல் பாடலான "மார்கழித் திங்கள்" பாடலின் பொருள் கீழ் வருமாரு...

மார்கழி மாதத்தில், சந்திரன் இன்னும் வியாபித்திருக்கும் அதிகாலையில் துயில் எழுந்து நீராட வாருங்கள். வளமான செல்வச் சிறப்புமிக்க ஆயர்ப்பாடி பெண்களே, நந்தகோபன் யசோதையின் இளஞ்சிங்கம் போன்ற புதல்வன்... கறுத்தமேனியும், ஒளிவீசும் மதிமுகமும் கொண்ட நாராயணன் நமக்கு இந்த நோன்பிற்குறிய வரங்களைத் தந்தருள்வான்.. !

2 comments:

Ravi said...

Keerthi, hope you read about Dr.Sreenidhi Chidambaram's plan this season to perform compositions on Vainava Thamizh. She said writer Sujatha gave the heads up for this initiative. It would be interesting to watch this. Please see if you can post something on this (maybe even some pics from your camera) as part of your new Margazhi initiative. Thanks!

KRTY said...

Thanks Ravi. I will try and follow that one up. !