Monday, December 15, 2008
Mesmerizing மார்கழி ?
மார்கழி என்றாலே என் நினைவுக்கு வருவது, "மார்கழி என்றாலே நம் நினைவுக்கு வருவது.." என்று ஆரம்பிக்கும் பத்திரிக்கை துணுக்குகள் / செய்திகள்தான். வழக்கமாக டிசம்பர் சீஸன், பஜனை, குளிர், பனி மற்றும் இன்னபிற இத்யாதிகள்.. எனக்கு ஒரு வித்தியாசமும் இல்லை. விடுமுறை நாட்கள் அதிகம் உண்டு என்ற மகிழ்ச்சி மட்டும் உண்டு. கூடவே கோயில் பொங்கல் பிரசாதங்கள்..
இந்த வருடம் புதுமையாக (கொஞ்சம் அபத்தமாக) "மார்கழி ராகம்" என்று ஒரு படம் வெளிவர இருக்கிறது. பாம்பே ஜெயஸ்ரீ, டி.எம்.கிருஷ்ணா ஆகியோர் பாடி நடித்திருக்கும் (!) இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு சங்கீதக் கச்சேரி. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்பதைத் தவிர, இதைக் காணும் நோக்கம் வேறு எதுவும் எனக்கு இல்லை.
"அகல் ஃபிலிம்ஸ்" தயாரித்து ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இயக்கத்தில் வெளிவரும் இந்தப் படம், ஒரு புதிய முயற்சியே. இருந்தாலும், சினிமா தியேட்டருக்குள் சென்று கச்சேரி பார்ப்பதென்பது சங்கோஜமாக இருக்கிறது. "அந்த கல்சரைத்தான் உடைக்கிறோம்" என்கிறார்கள். வாஸ்தவம்தான். ஆனால், ஏற்கனவே டிவிடிக்களிலும் சிடிக்களிலும் கச்சேரிகளைப் பதிவு செய்து தொலைக்காட்சியில் விருப்பத்திற்கேற்ப போட்டு கேட்கும் / பார்க்கும் கலாச்சாரம் வந்துவிட்ட காலத்தில், அதே டிவிடியை பலபேருடன் சேர்ந்து சினிமா தியேட்டரில் பார்க்கப்போகிறோம் என்பது தான் புதுமை...
நூற்று இருபது ரூபாய்க்கு சத்யமில் உட்கார்ந்து இதைப் பார்ப்பது, சபாக்களில் அமர்ந்து பார்ப்பதை விட படு சீப். சபாக்களில் ஐனூறு, ஆயிரம் கொடுத்தால்தான் முன்னாடி சீட் கிடைக்கும். ஆனால், ஆதென்டிசிட்டி ? மிஸ்ஸிங்... டிக்கெட் கிடைத்தால், பார்த்துவிட்டு என் அனுபவங்களை எழுதுகிறேன்.
பிகு - நல்ல வேளையாக சஞ்சை சுப்ரமணியத்தின் கச்சேரியை பதிவு செய்யவில்லை. 70mm திரையில், சஞ்சையின் முகசேஷ்டைகள் பார்க்க ப்ளெஸன்டாக இருக்காது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment