Friday, December 19, 2008
எஸ். சௌம்யா !
S. சௌம்யா - இந்த தலைமுறயின் பிரபலமான கர்னாடக சங்கீத வித்வாம்ஸினிகளில் ஒருவர். ஐ.ஐ.டி யில் அபாரமாக (top-ranked scholar) கெமிஸ்ட்ரி படித்தவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இசைத் துறையில் பி.ஏ. எம்.ஏ. படித்தவர். இளம்பிராயத்திலிருந்தே சங்கீதத்துடன் தொடர்புடையவர். இவர் கச்சேரிகள் பல செய்வதைத் தாண்டி "கர்னாடிகா" (Carnatica) என்ற ஒரு நிறுவனத்தை சில இசை ஆர்வலர்களுடன் சேர்ந்து நடத்தி வருகிறார். இசை என்சைக்ளோபீடியா முதல் பல சங்கீத சம்பந்தமான விஷயங்களை இந்தக் குழுமம் நிகழ்த்திவருகிறது.
இவரது குரல் இனிமைக்கும், இசைஞானத்தின் வளமைக்கும் நமது பாராட்டல்களுடன் இந்த "தடாகம் ஒன்று" என்ற பாடலைக் கேட்போம். நந்தனார் சரித்திரத்தின் வரிசையில் வரும் இந்தப் பாடலுக்கு முன்னுரை வேண்டுவோர், இந்த வீடியோவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக கேட்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Aduthhu Bombay Jayashree-ya? :)
I love her voice.
Idha kelunga.
Kundalakesi, thanks. It is a great fusion.
Post a Comment