Tuesday, December 23, 2008
மஹாராஜபுரம் சந்தானம்
என் வீட்டில் டேப் ரிக்கார்டர் வாங்கியபோது, உடன் வந்த பாடல் கேஸட்டுகளில் "மஹாராஜபுரம் சந்தானம்" அவர்களின் கேஸட்டும் இருந்தது. அப்போதெல்லாம் கர்னாடக இசை கேட்கவே பிடிக்காது. கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஈடுபாடு வந்தபோது, இவருடைய பாடல்கள் வெகுவாகப் பிடித்துப்போனது. பட்டையான திடகாத்திரமான குரலுடன் இவர் முருகனைக் கூப்பிட்டால், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான் - முருகன். அப்படி ஒரு சாரீரம்.
ம்யூசிக் அகாடமி வழங்கி கவுரவிக்கும் "சங்கீத கலானிதி" பட்டத்தைப் பெற்றவர். "மஹாராஜபுரம்" என்பது இவர் பிறந்த ஊர் இல்லை. இவரது தந்தை பெயர் மஹாராஜபுரம் விஸ்வநாதஐயர் என்பதால் மஹாராஜபுரம் ஒட்டிக்கொண்டது. எம்.டி.ராமனாதனுக்கு அடுத்து (நான் அறிந்தவரையில்) கனமான குரல் கொண்டவர் மஹாராஜபுரம்.
இவர் பாடி பிரபலமான இரண்டு பாடல்களை இங்கே செறுகி இருக்கிறேன்.
முதல் பாடல் ஒரு பொக்கிஷம். ஒரு விதமான ஃப்யூஷன்.. எங்கே எப்போது பாடினார் என்று தெரியவில்லை. ஆனால், இன்டெர்நெட்டில் எங்கேயோ மேய்ந்து கொண்டிருக்கும்போது இடறிய பொக்கொஷம். ஆடியோ க்வாலிடி கொஞ்சம் கம்மிதான். ஆனால், அந்த மனோகரக் குரலில் நீங்கள் மயங்குவது நிச்சயம். "கங்காதர சங்கரா, கருணாகரா !" என்ற இடம் அவரது ட்ரேட்மார்க் நளினம் and கம்பீரம்.
இரண்டாவது பாடல் "வரமொன்று தந்தருள்வாய்". இந்தப் பாடலின் ஆடியோ க்வாலிடி அபாரம். தமிழும், இசையும், இவர்தம் குரலும் எப்படி Blend ஆகி நம்மை பரவசப்படுத்துகின்றன பாருங்கள்.
லிரிக்ஸ்
-------
ராகம்: ஷண்முகப்ரியா
தாளம்: ஆதி
பல்லவி
வர மொன்று தந்தருள் வாய்! - வடிவேலா!
வர மொன்று தந்தருள் வாய்! - எங்கள்
மரகத மா மயிலேறும் ஆறுமுக வடிவேலா! (வரமொன்று)
அனுபல்லவி
"பரம்" என்ற சொல்லுக் கொரு பொருளே! - பரத்தில்
"பரம்" என்ற சொல்லுக் கொரு பொருளே! - இளம்-
-பச்சைக்கு மிச்சைக்கும் - நடுப் பொருளே!
பலபொருள் கேட்டுனை அது இது எனாது-
-பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன்! அந்த (வரமொன்று)
சரணம்
பொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டவை-
-புளித்துப் புளித்துப் போச்சே! ஏனென்றால் உந்தன்
புன்னகை முகம் - கண்டதால் ஆச்சே!
இன்னும் உலகமுறும் இன்பம்" என்றவை-
எப்படியோ மறந்து போச்சே! ஏனென்றால் உன்
உன் ஏறுமயில் நடம் கண்டதா லாச்சே!
முன்னும் மனமுருக - முருகா! முருகா" என்று
மோஹமீறித் தலை சுற்றலாச்சே! - சொல்ல வந்த
மொழி கூட மறந்துதான் போச்சே!
"பொன்னார் மேனியன்" காதில் சொன்னாயே (ஏதோ) - அந்தரங்கம் -
போதுமென்று கேட்கவும் ஆசையாச்சே!
மத்யம காலம்
புனிதமான அறுபடை வீடுடையாய்! - புகு மதக் களிறு நடையுடையாய்
இனித்தநறு வைங்கலவை யதனினும் - இனித்த தினையினைச் சுவையுடையாய்!
எனக்குமொரு பதம் தந்தருள -மண -மணக்க வருதமிழருளுடையாய்!
அன்னை யினும் சிறந்ததான - அருளொடு நிறைந்த தான - அறுமுக! வடிவேலா! (வர)
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
the first song - in Revathi -- that is a Dayanand Saraswathi composition...Santhanam did a fusion titled "Sangamam" with M.S. Viswanathan...I am pretty sure this one came about from there....the same song in pure carnatic is in the CD titled "compositions of dayanand saraswathi"
the second song -- its composed by Oothakaadu....that song is in a T-series album....some of the other songs in that album are "himadri suthae - kalyani", "gajavadana beduvae - hamsadhwani" (typically sung in gambira naatai, but santhanam did it in hamsadhwani) , "sarasa sama dhaana" and ends with tillana in kundalavarali....
the T-series album is titled "Mellifluous melodies of Maharajapuram santhanam"..
I have to this date, all the CD's of Santhanam...he is my "manaseega guru"..
I wrote a few lines about him that I gave to VVSundaram (cleveland sundaram) during my recent visit to pass on to his kith and kin...Its way big and I started publishing it beginning today (had originally reserved it for his birthday day in 2009)
he was an amazing singer...I never had the privilege of listening to him in music academy...on the year he was crowned "sangita kalanidhi", the academy was so packed, they put rugs outside in the huge parking lot, and televised live the concert....that was the only year when the academy was so packed that way...not to one artiste had I ever seen it that way....ever....he did not do justice in that concert evidently, and subbudu blasted him in the review.....the very next day, he cancelled his concert in German hall...
I listened to him once live in TAG auditorium in chromepet, and alas, that was it...he was gone.....
your post kindled all those memories...
ganesh
Thanks a lot Ganesh. It was a great piece of information.
Good news for you guys!
Dec 27th.. coming saturday evening 6.30, you can listen him live at Nanganallur anjaneyar temple!
Dont miss it!!!
Priya
Post a Comment