Monday, December 22, 2008

வீணை



கர்னாடக இசைக்கருவிகளிலேயே, எனக்கு ரொம்ப பிடித்தது வீணை. பலமான சாரீரத்துடன் யாரோ ஒருவர் பாடுவது போல ஒலி எழுப்பும்.. அதே சமயம் நளினத்திற்கும் பஞ்சமில்லை. ஒரே வார்த்தையில் சொல்வதானால் "ப்ரிஸ்க்" என்று சொல்லலாம். ஆனால், literally speaking, அது வாசிப்பவரின் கையில் இருக்கிறது :)

மேலே, வீணை காயத்ரியின் கையில் இருக்கிறது. வீணை காயத்ரியின் பல ஆடியோ சிடிக்கள் நல்ல ஹிட். இவரைப் பற்றி அதிகம் தேடிக்கண்டுபிடிக்கமுடியவில்லை. யாராவது தெரிந்தால், கமெண்ட் விடுங்க.

நம்ம ஊரில் கர்னாடக இசைக்கே மரியாதை கொஞ்சம் குறைவுதான்.. அதிலும், அதிகம் வெளிச்சம் பெறுவோர் வாய்ப்பாடல் பாடுவோர்தான். இது மாதிரி, instrumental accompanies எல்லாம் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று ஒரு குறை இருப்பதையும், அதன் நியாயத்தையும் ஏற்கனவே அவ்யுக்தாவில் பேசியிருக்கிறோம்.

கீழே, ராஜேஷ் வைத்யா. இவரும் சிறந்த வீணை இசைக்கலைஞர். ஆனால், இவர் அதிகம் ஆராய்ச்சி செய்பவர். ஃப்யூஷன் இசை முறையை கர்னாடக சங்கீதத்தின் டாமினேஷனுடன் முயற்சி செய்து பல வெற்றிகள் கண்டிருக்கிறார். அடிக்கடி ராஜ் டி.வி.யில் இவரைப் பார்க்கலாம். இவரது இன்னுமொரு ஃப்யூஷன் முயற்சி, இதோ.

2 comments:

Anonymous said...

chitti babu is my favorite. listen to naatakurunji hit chalamela - http://www.musicindiaonline.com/music/carnatic_instrumental/s/artist.141

KRTY said...

Thanks Lazy. It was a great listening experience.