
ஒளிர் திங்களொழிந்து விடிந்து வாரத் திங்கள் வர
தளிர் மலர்கள் கன்றுகள் பறவைகள் குதூகலித்தெழ
களிப்பாட்டம்போட்ட மானுடம் மட்டும் கட்டிலில் கிடப்ப
எளிதான ஒரு கேள்வி என்மனதில் பிரசன்னமானது.
நிதம் விழித்து குதூகலிக்க மலர்களால் எங்கணம் முடிகிறது ?
கதிரவன் பார்வையின் விரல்பட்டு மொட்டுகள் மலர்கின்றன
மனிதனின் போர்வைதான் வெளிச்சத்தில் முகம்மேல் விரிகின்றன
விலங்குகள் பறவைகள் ஒவ்வொரு விடியலையும் வரவேற்கின்றன
ஆனால்
ஞாயிற்று இரவுகள் மனிதனுக்கு திங்களின் பயத்தைக் கொடுக்கின்றன.
மனிதன் மட்டும் தான் இந்த ஷ்ரிஷ்டியில் சோம்பேறியா ?
ஓ !! இப்போ புரிந்தது இரகசியம்
இரண்டு நாள் லீவு விட்டால் தெரியும், மலர்களுக்கு..
திங்கள் கிழமை மலர்வது எத்தனை கொடுமையானதென்று.
2 comments:
Nice one Keerthi!!!
Nandri, Saymee !
Post a Comment