Thursday, January 22, 2009
Sure Shot
இந்த வருடம் ஆஸ்கார்களை அள்ளப்போகும் படம்.. இந்த வயதான இளைஞர் யார் தெரிகிறதா ?
என் ஊகத்தில், இந்தப் படம் - "The Curious Case of Benjamin Button" அள்ளப்போகும் அவார்டுகள்
1. சிறந்த ஒப்பனை
2. சிறந்த நடிகர் - பிராட் பிட்
3. சிறந்த படம்
4. சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை
பரபரப்பாகப் பேசப்படும் "Slumdog Millionaire" (ஹிந்தியில் Slumdog Crorepathi... தமிழில் வந்தால் எப்படி வைப்பார்கள் - 'குப்பநாய் கோடீஸ்வரன்' என்றா ?) பல அவார்டுகளுக்கு நாமினேட் ஆகியுள்ளது.
அவற்றில் இசைக்கு நம்ம ஆள் போட்டியிடுகிறார். ஜெயித்தால், மீசையை வளர்த்து முறுக்கிக்கொள்ளலாம்.
Slumdog Millionaire சிறந்த ஒளிப்பதிவையும், படத்தொகுப்பையும் வாங்கினால் வாங்கலாம். ஆனால் 'The Dark Knight' ஒளிப்பதிவில் தட்டிச்செல்லும் என்பதும் என் ஊகம். Slumdog Millionaire "சிறந்த படம்" பிரிவில் நாமினேட் ஆனதே கொஞ்சம் ஓவர்.
அனிமேஷன் கேட்டகரியில் 'WALL-E'யும் 'Kung-fu Panda'வும் இருக்கிறது. என் ஆசை குங்க்ஃபு பாண்டா ஜெயிக்க வேண்டும் என்பதுதான்.
"MILK" இன்னும் பார்க்கவில்லை.. அதே போல் "Frost / Nixon"ம் பார்க்கவில்லை.
"In Bruges" படம் எல்லாம் இங்கே வெளிவரவே இல்லை (பர்மா பஜாரைத் தவிர). இந்தப்படம் பல துறைகளில் நாமினேட் ஆகும் என்று நான் எதிர்பார்த்தேன்.
குறைந்தபட்ச சந்தோஷம், இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களில் பெரும்பாலானவையை ஏற்கனவே பார்த்து அதை ஒரு 'சினிமா ரசிகனாக' ஜட்ஜ் செய்ய முடிந்தது.
Full Nomination List here
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Hello.. Do you know how to Add Adsense Code Inside Single Post Only in XML Template? Visit your blog to learn how.. Have a nice thursday!
Keerthi,
I am not sure about the best film for which Dark Knight may be a strong contention. But for other items you mentioned - Actor, Makeup and screenplay - Benjamin is sure to bag the awards.
Especially, I am stunned at the makeup. Amazing!
-Arunram
Appo Benjamin Button padam nalla irukkunu solreenga? Trailer paathen, yeno paakanumne thonalai. Oscar kedacha kekkave vendam, kandippa paaka maaten :D
Enadhu guess, inge.
Post a Comment