Saturday, September 26, 2009

கம்ப ராமாயணம் - படிக்க முற்படுதல்

பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்;
'அழிந்தது, வில்' என, விண்ணவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள், முப் பகை வென்றார்.

யக்யத்தில் வளர்த்த அக்னியில், நெய்யை ஊற்றி ஆகுதி செய்தவுடன் திகுதிகு என எழும் நெருப்பின் வேகத்தையும் கம்பீரத்தையும் கொண்டு இராமபிரான், வில்லை வளைக்க முற்படுவதற்காக எழுகின்றான். அவன் எழுந்த தோரணையையும், முன்னரே வியந்திருந்த அவன் தோளின் வலிமையையும் உணர்ந்திருந்த விண்ணவர், அந்த சிவதனுசு இவன் கையில் அழியப்போகின்றது என்று ஆர்ப்பரித்து ஆசிகள் மொழிந்தனர். கடைசியில் கூறியிருக்கும் "முப்பகை வென்றார்" என்பதற்கு உள் அர்த்தம் தெரியவில்லை.

2 comments:

அ. நம்பி said...

`அழிந்தது வில்என விண்ணவர் ஆர்த்தார்; முப்பகை வென்றார் ஆசிகள் மொழிந்தனர்' என்று பொருள்கொள்ளவேண்டும்.

முப்பகை - காமம், வெகுளி, மயக்கம் எனும் மூன்று உட்பகைகள்.

முப்பகை வென்றார் - இம்மூன்று உட்பகைகளையும் வென்ற முனிவர்கள்.

நர்சிம் said...

நல்லா இருக்கு.