Friday, November 12, 2010

Unstoppable



UnStoppable.. நம்ம ஸ்பீட் படம் மாதிரி விறுவிறுவிறுவிறுப்பான படம்.  லாஜிக் புடலங்காய் எதுவும் கவனிக்காமல், ஒரு லார்ஜ் கொக்க கோலாவை சப்பிக்கொண்டே பார்த்தால் படம் முடியும்போது பாத்ரூமுக்கு ஓடுவீர்கள்.. அதாவது, நடுவில் நகர முடியாமல் கட்டிப்போடும் "High Octane" திரைக்கதை.. டோனி ஸ்காட் (டென்ஸல் வாஷிங்டனின் ஆஸ்தான டைரக்டர் - க்ரிம்ஸன் டைட், மேன் ஆன் ஃபையர், டேக்கிங் ஆஃப் பெல்ஹாம், டேஜாவூ) நம்ம ரஜினிகாந்தை வைத்துப் படம் பண்ண ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்..

என்ன நடந்தாலும் நம்ம டென்ஸல் வாஷிங்டன் காப்பாத்திவிடுவார் என்று நம்பினார் கைவிடப்படார். இப்பொழுதெல்லாம் ஆபீஸில் ப்ரொடக்ஷன் இஷ்யூ வந்தால் கூட, அடுத்த லிஃப்ட்டில் டென்ஸல் வாஷிங்டன் வந்து அபயஹஸ்தம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.. !


ஒரு ரயில் இஞ்சினீயரின் சின்ன சொதப்பலில் ஒன்றரை மணி நேரப் படம் ஆரம்பிக்கிறது.. இப்படி எல்லாம் நடக்குமா ? இவ்வளவு கவனக்குறைவாக யாராவது இருப்பார்களா ? என்ற லாஜிக் எல்லாம் வீட்டுக்கு வந்த பிறகுதான்.. தியேட்டரில் " நிவந்தன புருவம், நல் நுதலில்".. !

ஆளில்லாத ரயில், நம்ம ஊர் வியாசர்பாடி ரயில் மாதிரி வேகம் எடுக்கிறது.. கூடவே திரைக்கதையும்.. அந்த ரயிலை அதிக சேதம் இல்லாமல் எப்படி நிறுத்துவது.. அட.. அதற்கென்ன ?! ஹெலிகாப்டரில் ஆளை இறக்கி இண்டிகேட்டர் போட்டு ப்ரேக்கை அமுக்கினால் போச்சு.. ஆனால் மனித மனம் வித்தியாசமாக யோசிக்கிறது.. இப்பொதானே பத்து நிமிஷம் ஆச்சு.. அதெல்லாம் வேண்டாம்.. என்று ஓரமாக ஒரு விருப்பம் எழுகிறது.. இயக்குனர் நமக்கு அடிபணிந்து டாப் கியரில் "அமுக்குடா ஆக்ஸலேட்டரெ !!" என்று தூக்கு தூக்குகிறார். Sheer adrenaline !

படத்தின் பின்னனி இசை.. வாவ் !! முதல் சில சீன்களில் ப்ரிட்ஜின் மீது வெறும் இஞ்சினில் டென்ஸல் வாஷிங்டன்னும், க்ரிஸ் பைனும்  நகர்கின்ற காட்ச்சிகளில் இனிமையோ இனிமை.. ! அதே போல படத்தின் திரைக்கதையோடு போட்டி போட்டு ரத்த நாளங்களில் படபடப்பை ஏற்படுத்துகிறது - பின்னனி இசை.. டாப் க்ளாஸ் !

கேமரா, எடிட்டிங் எல்லாமே பக்கபலம்.. இன்ஃபாக்ட்,  சில பல சொதப்பல்கள் தெரியாமல் இருக்கவும்,  நடு நடுவில் இரண்டு நிமிட இடைக்கதை செறுகல்களால் படம் தொய்வடையாமல் இருக்கவும் கேமராவும் எடிட்டிங்கும் உதவுகின்றன..

ஆக மொத்தத்தில் another hollywood action movie.. just a class apart !

2 comments:

Anonymous said...

No Keerthi, the very very weak agnostics would be a good choice than Rajni :)

narayanan said...

Other than some elementary logical flaws, the movie did the action/ thriller part very well. Certainly worked better than 'Red' for me.