Thursday, December 09, 2010

விமர்சனப் படம்

படம் பார்த்தபின் விமர்சனம் செய்வது ஒரு வகை.. படம் பார்த்த்துக்கொண்டிருக்கும்போதே, டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் குறு-விமர்சனம் செய்வது ஒரு வகை.. படம் வருவதற்கு சில நாட்கள் முன்பே ஊகத்தில் கருத்து தெரிவிப்பது ஒரு வகை.. படம் தயாரிக்க தயாரிப்பாளர் நோட்டு அச்சடிக்க உட்காரும்போதே ஸ்பெக்குலேட் செய்து, இவள்தான் கதாநாயகி, இது அந்த ஆங்கிலப்படத்தின் தழுவல், தெலுங்கு பட உல்டா என நாமாக கதையளப்பது ஒரு வகை..

சும்மா இருக்காமல், இன்னும் ஒரு வகை செய்வோம்..அதற்குமுன், lets hold that thought. !


சினிமா விமர்சனம் என்கிற ஈக்குவேஷனில் மூன்று entityக்கள் உள்ளன. முதலில் சினிமா (சினிமா என்கிற வஸ்து, அதன் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் பயன்).. அடுத்து விமர்சகர்.. அடுத்து வாசகர் அல்லது விமர்சன நுகர்வோர்.


இதில் மிக முக்கியமான இரு variables - விமர்சகர் & வாசகர்.

பெரும்பாலான விமர்சகர்களின் வரிகளைப் படிக்கும்போது, ஒரு அதிமேதாவி தன் பூதக்கண்ணாடியால் பலகோடி ரூபாய் பெருமானமுள்ள, பல பேரால், பல நாட்களாக  செதுக்கப்பட்ட முயற்சியை, தனது வாழ்க்கைத் தரம், தனது மன நிலை, தனது அனுபவ அறிவு, தனது கற்பனை, தனது ஆசை, தனது விரக்தி, தனக்குத் தெரிந்த "வெகுஜன" விருப்ப/வெறுப்பு - ஆகிய மட்டக்குறிகள் கொண்டு அளக்கப்பட்ட தேர்ந்த அல்லது தேறாத கருத்தாகத் தோன்றுகிறது.

சில விமர்சகர்கள், அந்தப் படம் தனக்கென ப்ரத்யேகமாக எடுக்கப்பட்டதாக பாவித்து, சிலாகித்தோ அல்லது சின்னாபின்னமாக்கியோ எழுதுகிறார்கள்.
 சிலர், "மக்கள்" என்ற பெயர்ச்சொல்லுக்கு "தன்னைத் தவிர உள்ள இதர உயிரினங்கள்" என்ற பொருள் கொண்டு ஒரு படத்தை "மக்கள்" எவ்வாறு க்ரஹிக்கிறார்கள் என்று க்ரஹிக்கிறார்கள்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். "சினிமா விமர்சனம்" என்ற ஒரு கோட்பாடு எவ்வாறு உட்கொள்ளப்படுகிறது.. Contrary to the popular belief, விமர்சனத்துக்கும் பட வெற்றிக்கும் பெரிய சம்பந்தம் இல்லை (என சில பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன). Metacriticல் அதிக மார்க் வாங்கிய படங்கள் எல்லாமே வெற்றிபெற்ற படங்கள் இல்லை. ஆனந்தவிகடனில் நாற்பதுக்கு மேல் மதிப்பெண் பெற்று டெப்பாசிட் இழந்த பல படங்களும் அதற்கு ஆதாரம்.

அடிப்படையில் சினிமா என்பது சீரியசான ஒரு விஷயம் இல்லை என்பதால், அதன் தரம் "அளவிடப்பட்டு" நுகரப்படுவதில்லை. விளம்பரம் என்னும் மாயைதான் இன்னும் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்கின்றது. விமர்சனம் அளவுகோல் இல்லை - வெறும் Arguement தான் (என்பது என் கருத்து). இன்னும் ஒரு பரிமாணத்தில், ஒரு சுய பரிசோதனையாகத் தோன்றுகிறது. படம் பார்த்தபின் விமர்சனம் படிப்பது இதில் சேர்த்தி. விமர்சகர் அறிவைத் தட்டிக்கொடுப்பதோ அல்லது முகவாயில் விளாசுவதோ - நாம் எப்படி அவருடைய கருத்தோடு ஒப்பிட்டுப் போகிறோம் என்பதைப் பொறுத்து உள்ளது.

சரி, lets bring back the thought. இன்னும் ஒரு வகை.

எனது பழைய பாஸ் கூப்பிட்டு எல்லார் முன்னிலையில் மேனி கூச அளவில்லாமல் பாராட்டி, அடுத்த காரியத்தை கையோடு பணித்து சிரமேற்று செய்யச்சொல்லுவார்... - "I've given you the Oscars.. go make the movie !" என்பார்.

அப்படிச் செய்தால் என்ன.. ? ஒரு மகத்தான சினிமா.. மாசற்ற தயாரிப்பு.. - இன்னும் அப்படி ஒரு படம் வரவில்லை என்ற ஊகத்தின் அடிப்படையில் - ஒரு விமர்சனம் எழுத வேண்டும். A review of a perfect movie, that is still a pre-concept. யோசிப்போம்.. !

அதற்குப் பிறகு சினிமா எடுக்கலாம்.

1 comment:

sachi said...

Hi Keerthi

I am not able to read your blog properly because of some problem with the fonts installed on my system (Ubuntu). I like to know the font which you are using.

Thanks.

Vijay