Thursday, May 03, 2012
Kamal and Sujatha
விக்ரம் ஒரு வட்ட வடிவப் படுக்கையில் படுத்திருந்தான். எதோ ரோமாபுரி மன்னன்போல் லூஸாக உடையணிந்திருக்க, இந்தப்பக்கம் திராட்சை ரசம் ஒருத்தியும், அந்தப்பக்கம் மாதுளை ரசம் இன்னொருத்தியும் தர, அருகே பிறிதொருத்தி உடம்பு பிடித்துவிட, கைத்தாங்கலாக ஒரு கை ராஜகுமாரி மேலும், மற்றொருகை ப்ரீத்தி மேலும் போட்டுக்கொண்டு கோப்பையைச் சீப்பிக்கொண்டிருந்தான்.
"அப்படியா ! இப்ப எப்படி இருக்கே ? எங்க இருக்கே ?" என்றார் ராவ் புன்னகையுடன்.
"ஆஸ்பத்திரியில் ! சலாமியா ஆஸ்பத்திரியில். நல்ல அடி!"
இளவழகன் ரிஸீவரைப் பற்றிக்கொண்டு, "எங்கெல்லாம் வலிக்குது ?"
"உடம்பு பூராங்க,:" அவர்கள் இருவரும் புஜங்களைப் பிடித்துவிட,
"கை கால் எல்லாம் அமுக்குறாப்ல வலியா ?"
"ஆமாங்க கரெக்டாச் சொன்னீங்க!"
"மருந்து சாப்பிடறியா?"
"ஆமாங்க. இப்பக்கூடச் சாப்பிட்டுகிட்டு இருக்கேன்!" என்றான் கோப்பயை நாக்கு நுனியால் நிரடி.
"மாம்பழம், மாதுளை, எலந்தை இப்படிப் பழங்களாகவே நிறைய சாப்பிடு!"
"அது இந்த ஊர்ல நிறையக் குலுங்குதுங்க. ராவ்கிட்ட சொல்லுங்க. இந்த மாதிரி உடம்பு சரியில்லாததால.."
ராஜகுமாரி எதிரே இருந்த காமிராவைக் காட்டினாள். விக்ரம் அதை உடனே உணர்ந்து, "மிஸ்டர் ராவ், ஏம் ஐ ஆன் டிவி ? மை காட் !"
"ஆமா, வீடியோ கூட எடுத்திட்டு இருக்கோம்."
"இது ரொம்ப அநியாயம்," என்று இந்தப்பக்கம் அந்தப்பக்கம் பார்த்து ஒரு ஆப்பிள் வெட்டும் கத்தியைத் தேர்ந்தெடுத்துக் காமிராவின்மேல் குறி வைத்து எறிய, "சிலுங்" என்று சப்தம் கேட்டு பிம்பம் கரைந்து போய் மணல் வாரியது.
"முழுக்கக் காட்டாம முடிச்சுப்புட்டானே!" என்று அங்கலாய்த்தார் இளவழகன்.
(முற்றும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment