Thursday, June 05, 2014

Nausea

விருமாண்டி படத்தில் "கருமாத்தூர் காட்டுக்குள்ளே" பாடலில் வரும் வரி..

சைவவாடையது கொஞ்சமும் சகிக்கவில்ல
தாக்கி முகம் சுழிக்க வைக்குது
என்று செங்கண் துடிதுடிக்க அங்கம் பளபளக்க
போங்கினானே பேய்க்காமனே!

சைவ சமையலின் - அதாவது பொங்கல் வைத்துப் படைக்கும் பேச்சியம்மாவின் சமையலின் - வாசனை முகம் சுளிக்க வைக்கிறதாம் பேய்க்காமனுக்கு. அதெப்படி !.. அசைவ சமையலாவது அப்படிச் சொல்லலாம்.. பொங்கல் நல்லா கமகமன்னுதான...ே இருக்கும் ? ஒரு கதாபாத்திரத்தின் குரூரத்தை இது காட்டுகிறது. நீட்டி முழக்கி ஒரு கதாபாத்திரத்தை எழுத்தில் செதுக்க முடியும். ஆனால், ஒரு பாடலில் ஆரம்பித்து, மூன்றாவது பத்திக்குள் ஒருவன் தீயவன் என்று கேரக்டர் பில்டப் செய்திருக்கிறது இந்தப்பாடல். "மாட்டுக் குடல் எடுத்து மாலையாகப் போட்டுத்தான், பேச்சியம்மா இடத்துக்கவன் வந்தானே" என்று பாடல்வரி வரும்போதே நம் மனம் "பேய்க்காமன்" குணத்தை Evil = Evil + 1; என்று கணக்கெழுதிக்கொள்கிறது.

ஆங்கிலத்தில் "ஸேவ் தி கேட்" என்று ஒரு புத்தகம் உண்டு - திரைக்கதை எழுதுபவர்களுக்காக. அதில் இந்த "ஸேவ் தி கேட்" என்னவென்றால், பழங்காலப் படங்களில் கருப்பு வெள்ளையிலும் வெள்ளையாக ஹீரோ திரையில் நுழையும்போதே ஏதாவது நல்லது செய்வார்... உதாரணத்துக்கு ஒரு விழப்போகும் அல்லது அடிபடப்போகும் பூனையைக் காப்பாற்றுவார். ஒரே காட்சியில் எப்படி இரத்தின சுருக்கமாக ஒரு கருத்தை அல்லது குணாதிசயத்தை உணர்த்துவது என்பது உட்பட ஒவ்வொரு காட்சியையும் எப்படி "பத்தி பத்தியான" கதையை திரைக்கு ஏற்றார்போல் காட்சியாக எழுதுவது என்று விளக்கும் புஸ்தகம். நானும் வாங்கிப் படித்திருக்கிறேன்.. இன்னும் திரைக்கதைதான் எழுதவில்லை. இதையெல்லாம் ஏன் யோசிக்கிறேன் ?!

இப்படித்தான்.. மனம் எங்கேயோ ஆரம்பித்து எங்கெங்கோ அலைந்து சம்பந்தமே இல்லாமல் எங்கோ சென்று சிந்தனை ரயில் தடதடத்துத்தடம்புரண்டுவிடுகிறது. எதற்காக இதை எழுத ஆரம்பித்தேன்.. ?

Mediocrity என்ற வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை தெரியவில்லை. "சாதாரணம்" என்று சாதாரணமாகச் சொல்லமுடியாது. Because, Mediocrity சாதா-ரணமல்ல. அவஸ்தையான-ரணம். உதா-ரணத்துக்கு இன்று காலை விஜய் டி.வி யில் "விஜய் அவார்ட்ஸ்"ஸில் சிவகார்த்திகேயனும், திவ்யதர்ஷினி என்று யாராலும் அழைக்கப்படாத டிடியும் விருது வாங்கி நெகிழ்ந்த்தகமகிழ்ந்து கண்ணீர் மல்கி மைக்கில் பேசியதைப் பார்த்தேன். பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படும் இவர்கள் மீது எனக்கொன்றும் வருத்தம் இல்லை. ஆனால், Excellenceக்கான இலக்கு இவ்வளவு ஈசியாகப்போனதுதான் வருத்தம். The bar is just too low. அதேன் சார், "86%தான் வாங்கினியா ?" என்று +2 மார்க்கில் குறை படுகிறோம். "பையன் வெறும் பிஃப்டி தவுஸண்ட்தான் வாங்கறானா ?" என்று ஜாதகமே பார்க்காமல் ரிஜெக்ட் செய்கிறோம். ஆனால், இந்த சினிமா டிவிக்களில் மட்டும் சிலரை காரணமே இல்லாமல் புகழ்ந்து, கொஞ்ச நாட்களில் சினிமாவில் நடிக்கவைத்து அப்படியே மாபெரும் Legendகளாக்கி விடுகிறோம்.. ! நாங்க எங்க செய்யறோம்.. ? அவிங்களா செஞ்சுக்கிறாங்க என்கிறீர்களா ?

கரெக்ட். உண்மைதான்.. அவர்களாகவே அவர்களைப் பாராட்டிக்கொள்கிறார்கள். சுமாராகப் பாடினாலே ஸ்டாண்டிங் ஓவேஷன். குத்தாட்டம் ஆடினாலும், பத்மினி நாட்டியம் ஆடிய அளவிற்கு "உங்க டேன்ஸில் அத்தனை பெர்ஃபெக்ஷன்.. உங்க தீம் இஸ் டிவைன்" என்று புகழ்கிறார்கள். பாராட்டெல்லாம் ரொம்ப சுலுவாகக் கிடைக்கும் மாயை தெரிகிறது. இருந்தாலும், அது வெறும் பொழுதுபோக்குத்தானே என்று உதாசீனம் செய்யலாம்தான். அப்புறம் என்னத்துக்கு ஃபேஸ்புக்கும், பிளாகும்.

சினிமா, டி.வி. மட்டுமில்லை.. பல்வேறு தளங்களில் mediocrity accept செய்யப்படுகிறது. ஏன் என்று கொஞ்சமாக யோசித்துப் பார்த்தேன். இந்த "appreciation", "motivation" எல்லாம் இருக்கிறதே.. அது யார் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் இருக்கிறது சூட்சமம். சிலர் அடுத்தவர் மோட்டிவேஷனில்.. சிலர் சொந்த மோட்டிவேஷனில்.. இந்த உந்துதல் இல்லாமல் பயணம் இல்லை. ஆனால் Excellenceக்கான பயணம் என்கு நிற்கிறது ? பல காரணங்கள் உள்ளன..ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு காரணங்கள். ஆனால், திருப்தி அடையாதவர்கள் மட்டும்தான் அடுத்த கட்டத்துக்கு தங்கள் ஆற்றலை push செய்கிறார்கள். "Stay hungry" என்று ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னாரே.. அதன் அடிப்படைத்தத்துவம் அதுதான். ஆனால், கொஞ்சம் சாத்தித்த உடனேயே - அதாவது "சாதாரணமாக" எதையாவது செய்தாலே, "எதையும் பாராட்டாத சமுதாயம். அதில் நான் அடக்கமில்லை.. இதோ வழங்குகிறேன் என் அளவில்லாப் பாராட்டை" என்று மழையாய்ப் பொழிந்து தள்ளுகிறார்கள்.

இந்த மாதிரி Mediocre சாதனைகளுக்கு புகழ்ச்சி ஏற்படும்போதுதான் சகிக்காமல் "தாக்கி முகம் சுழிக்க வைக்குது". I feel nauseated on appreciation towards mediocrity, leave alone mediocrity.

அப்பொழுதுதான் விருமாண்டி பற்றி யோசித்தேன்.

ச்சே.. ! என்னமா யோசிக்கிறேன்.

1 comment:

Madhu said...

வார்த்தைகள் இல்லை பாராட்ட.. மிக அருமை...��������