Sunday, July 20, 2008

மேரா நாம் ஜோக்கர் !



க்ரிஸ்டஃபர் நோலனுக்கும் சத்யம் தியேட்டருக்கும் நன்றி.

முதலில் சத்யம் தியேட்டர். ரெகுலராக காலை எட்டே கால் மணிக்கு ஒரு ஷோ போட்டு மக்களை குஷிப்படுத்துகிறார்கள் (கூடவே அவர்களும் பட்டுக்கொள்கிறார்கள்). குளிக்காமல் கொள்ளாமல், சோம்பேறித்தனமான என்னுடைய ஞாயிறு காலை என்பது மாததிற்கு ஒரு முறையாவது மாறியதன் முக்கிய காரணம் இது. சுமார் பதினொன்றரை மணிக்கு வெளியே வந்தால், ஞாயிற்றுக்கிழமை இன்னும் நமக்கு அவெய்லபிளாக இருக்கும். (புதிதாக சத்யமில் அறிமுகமாகியுள்ள கேரமெல் பாப்கார்ன் அறுபது ரூபாயில் கபகபவென கொள்ளையடித்தாலும் நாவோரத்தில் இனிமையாக ஜனித்து மறைகின்றது.) சத்யம் தியேட்டரின் ரூட் மாறிவிட்டது. இனிமேல் வைட்ஸ் ரோடின் வழியாக உள்ளே நுழைந்து முன்பு entryயாக இருந்த ரூட் வழியாக வெளியே சென்று பீட்டர்ஸ் ரோட் வழியாக மவுன்ட் ரோட் சென்று அடையலாம். டிராபிக் கொஞ்சம் கட்டுப்படும்.

அடுத்து வருவோம். பேட்மேன் (Batman 2) இரண்டாம் பாகம் - தி டார்க் நைட் (The Dark Knight) வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியானது - சென்னை உட்பட.

குருட்டு அதிர்ஷ்டத்தில் டிக்கெட் கிடைத்தது. விழுந்தடித்துக்கொண்டு புக் செய்தேன். காரணம் க்ரிஸ்டஃபர் நோலன். அவரது ஒவ்வொரு படத்திலும் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றவர் (ரசிப்பதில்). வாயைப் பிளக்கச் செய்தவர். மண்டையைப் பிச்சுக்க வைத்தவர். ஒரே படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தவர். நல்ல சினிமா காட்டுபவர்.

இந்த ஜட்டிபோட்டு வலம் வரும் ஸ்பைடர்மேன், ஹீமேன், சூப்பர்மேன் எல்லாம் பிடிக்காமல் இருந்தகாலம் உண்டு. அப்பொழுது பேட்மேன் (வௌவால் மனிதன்) ஸ்கோப்பிலேயே இல்லை. நோலன் எடுத்த படம் என்ற காரணத்தால் பேட்மேன் பிகின்ஸ் (Batman Begins) பார்த்தேன். அதற்கப்புறம் இந்தப்படத்துக்காக காத்திருந்த வேளையில் "தி ப்ரெஸ்டீஜ்" (The Prestige) என்றொரு படம் காட்டி மண்டை காய வைத்தார். அபாரமான படம். முழுமையாகப் புரிய மூன்று தடவை பார்த்தேன்.

முதல் பேட்மேன் பிகின்ஸ் படத்தில் வௌவ்வால் மனிதன் உருவான வரலாற்றை சொல்லியிருப்பார். சூப்பர் ஹீரோவுக்கான படங்களின் கதைத் தளத்தை மாற்றியமைத்த படம் இது. முழுமையான fantasy படம். தொய்வாக இருந்த Batman seriesஐ நிமிர்த்திய படம்.

அடுத்த படம இது. இந்தப்படத்தில் பேட்மேனின் முக்கிய எதிரி "ஜோக்கரை" எதிர்கொள்ளும் கதை. ஜோக்கர் பேட்மேனின் நாணயத்தையும் நம்பகத்தன்மையையும் சோதித்துப்பார்க்கும் கதை. வழக்கமான சூப்பர் ஹீரோ கதாம்ஸங்கள் இதில் ஏராளம். அவை எடுக்கப்பட்ட விதம் இருக்கிறதே.. ஆஹா ! அம்மாம்பெரிய ஸ்க்ரீனில் ஒரு பெரிய்ய ட்ரக் ஒன்று குப்புறடித்து விழுகையில் பகீர் என்கிறது. ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று ஒரு அளவுகோல் வேண்டுமென்றால், எக்ஸ்ட்ரீமான ரீடிங் கொடுக்க நீங்கள் பார்க்க வேண்டிய படம் "தி டார்க் நைட்".

பேட்மேனாக - போன படத்தில் நடித்த அதே க்ரிஸ்டியன் பேல் நடித்திருக்கிறார்.
ஜோக்கராக - ஹீத் லெட்ஜர்.

தியேட்டரில் நீங்கள் கண்டிப்பாக ஜோக்கருக்காக விசில் அடிப்பீர்கள். அட்டகாசமான பாத்திரப் படைப்பு. கொஞ்சம் பயப்படுவீர்கள். பேட் மேனே பதறுவார் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு. படம் முழுக்க கலக்கு கலக்கு என்று கலக்குகிறார். ப்ரத்யேக கைத்தட்டல் வாங்குகிறார், இந்த ஜோக்கர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த கைத்தட்டலை வாங்கிக்கொள்ள இந்த ஜோக்கராக நடித்த ஹீத் லெட்ஜர் நம்மிடம் உயிரோடு இல்லை. படம் ஷூட்டிங் முடிந்த சில மாதங்களில் இறந்துவிட்டார்.

எங்கேயோ இவர் நடித்த அந்த அனாயாசமான நடிப்பு, இங்கே உலகின் இன்னொரு மூலையில் கைத்தட்டல் வாங்கிக்கொண்டிருக்கிறது. இவருக்கு ஒரு சல்யூட் ! (போஸ்துமஸாக இவருக்கு ஆஸ்கார் கிடைக்கும் என்பது பல விமர்சகர்களின் நம்பிக்கை).

ஏற்கனவே பார்த்த கதை என்றாலும், தன்னுடைய திரைக்கதையால் எப்படி ஒரு பிரம்மாண்டமான வித்தியாசத்தைக் காட்டமுடியும் என்று நோலன் நிரூபித்துள்ளார். ஆக்ஷன் வரிசைகளில் பொறி பறக்கிறது என்றால், சாதாரன உரையாடல்களில் லைட்டிங் பின்னுகிறது. (இதில் சில பல சீன்கள் ஐமேக்ஸ் கேமராவில் படம்பிடிக்கப்பட்டவையாம். சென்னை பாவாத்மாக்களுக்கு ஐமாக்ஸ் குடுப்பினை இல்லை).

ரொம்ப நாட்களுக்குப் பிறகு சத்யம் தியேட்டரில் சூப்பரான எஃபெக்ட்டுகளுடன் பார்த்த படம்.

Worth my Sunday.

6 comments:

Gopi Sundharam said...

Saw the movie yesterday late night and enjoyed it. Especially the JOKER. Simply superb. At times I felt the movie was little bit dragging. If the movie length was cut a bit, it would have been perfect. But definitely worth watching.

Aravind said...

படம் சூப்பர் .ஆனால் கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் கடுப்பா இருந்துது .die like a hero மாதிரி end the movie heroic நு இருந்துது .

Anonymous said...

அதே 8 ம‌ணி காட்சியில் தான் நானும் வாயை பிள‌ந்து பார்த்தேன்....

Anonymous said...

adhuvum indha oorla interval vera kidayadha, 2.30 manineram konjam jaasthi thaan.

Yaaro sonnanga theaterla, "Nolan Brothers thiraikkadhai, action, Bale ellam oru pakkam irukkattum, Joker-kaagave thaniya oru padam edukkalam" Precisely my thoughts. Adhuvum Nolan iyakki, Heath nadichirundhaarna, oru Clockwork Orange range-ku irundhirukkum.

KRTY said...

Gopinath Sundaram, I liked the details too. I thought it would have been abstract to leave it short.

Aravind, read previous.

Avi, Oh whaaw ! What i recollect most from that session is the applause for the joker. Hopefully you were not in the balcony !!

Kundalakesi, :) He can do magic (Like what he does in the initial scene :P )

Anonymous said...

I was happy to see the home-packed crowd for the movie and good to hear them applauding. Luckily I was not in balcony.