Tuesday, May 18, 2010
நாணயம்
மேலே காண்பது போல, இந்த தேசத்தின் ஐம்பது மாநிலங்களின் பெயரோடு ஐம்பது வகையான நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளன. "50 State Quarters" என்ற முனைப்பில் இங்கே உள்ள 25 cent நாணயங்களின் பின்னால் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரும், அந்த மாநிலம் அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட வருடமும் பொறிக்கப்பட்டிருக்கும். நடுவில் , அந்த மாநிலத்தின் சிறப்புத் தன்மையோ, அங்கே புகழ் பெற்ற ஒரு இடமோ இடம்பெற்றிருக்கும்.
நான் உட்பட நிறைய பேர், ஐம்பது நாணயங்களையும் சேகரிக்க முற்பட்டுள்ளோம். எக்கசக்கானோர் (புது வார்த்தை) ஏற்கனவே சேகரித்து முடித்து ஃப்ரேம் போட்டு மாட்டிவிட்டனர். நான் இதுவரை பத்து பீராய்ந்துள்ளேன். இங்கே மொத்தமாக நூறு மில்லியனுக்கு மேலோர், இந்த நாணயங்களை சேகரித்துள்ளனர்.
கொஞ்சம் கணக்கு போடுவோம்.
இந்த 25 cent தயாரிப்பதற்கு 5 centக்கும் குறைவாகவே செலவாகும். மொத்தமாக 39 பில்லியன் நாணயங்கள், இந்த வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயத்தை நீங்கள் சேகரிக்கிறீர்கள் என்று வைத்துக்கோள்வோம் - அதை சேகரிப்பதால், சுற்றாடலிலிருந்து அதை நீக்கிவிடுகிறீர்கள். ஆக cost price ஐ விட ஐந்து மடங்கு லாபகரமான Selling Price. அமெரிக்க அரசுக்கு இதுவரை - இந்த முனைப்பினால் உருவாகிய நிகர லாபம் - 4.6 பில்லியன். பேஷ் !
உட்கார்ந்த இடத்தில் அத்தனை நாணயங்களையும் இன்டர் நெட்டில் வாங்கலாம். ஆனால் அதில் என்ன ஸ்வாரஸ்யம் இருக்கிறது. அதனால், மெதுவாக பாக்கெட்டில் அடிதட்டும் சில நாணயங்களில், இவ்வகைகள் தட்டுப்பட்டால் தனியாக சேர்த்துவைத்திருக்கிறேன்.
அங்கே, சென்னையில் பள்ளி நாட்களில் H, M T என்று தனித்தனியாக பொறிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயங்களைச் சேகரித்துக் கொடுத்தால் HMT வாட்ச் கிடைக்கும் என்று யாரோ கிளப்பிவிட்ட புரளியில் சுகமாக மாட்டிக்கொண்டு சூடா மிட்டாய் வாங்கக் கொடுத்த ரூபாய் நாணயங்களை மிச்சம் பிடித்து சேர்த்து வைத்த ஒரே தடவைதான், நான் இந்தப் பழக்கத்தில் இருந்த ஒரே காலம்.
அப்புறம் இங்கே அமெரிக்கா வரும் வழியில் பெல்ஜியம் நாட்டின் ப்ரஸ்ஸல்ஸ் ஏர்போர்ட்டில் சாக்லேட் வாங்கும் போது சில்லறையாக மாற்றிய யூரோக்களைப் பார்க்கவே ஆசையாக இருந்தது. பத்திரமாக சேர்த்து வைத்திருக்கிறேன். அப்புறம் இந்த ஐம்பது.
நம்ம ஊரில் அபூர்வமாக சில நாணயங்கள் வித்தியாசமாகத் தென்படும். புது ஒரு ரூபாய் காசுகளில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன..
இந்தியாவில், ஒரு விதமான ப்ரச்சனை இருக்கிறது. நம் ரூபாய் நாணயங்களைத் தயாரிக்க ஒரு ரூபாய்க்கு மேலே செலவாகிறது. அதனால்தான் அந்த நாணயம் மலிவாகி புழக்கத்திலிருந்து மெதுவாகத் தேய்ந்து வருகிறது. பத்து பைசாவும், நாலணாவும் பார்ப்பதே அரிது. எட்டணா எப்போதாவது கிடைக்கிறது.. எனது ஊகத்தில் இந்த நாணயங்கள் அச்சடிப்பது நிறுத்தப் பட்டிருக்கிறது.
இதில் இன்னுமொரு ப்ரச்சனை.. உதாரணத்திற்கு ஓரு ரூபாயை எடுத்துக்கொள்வோம். ஒரு ரூபாய் நாணயத்தை அச்சடிக்க ஒரு ரூபாய்க்கு மேல் செலவாகிறது. மேலும், ஒரு ரூபாய் நாணயத்தின் உலோகம்(எஃகு) ஒரு ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்டது. எனவே, சிலபேர் இந்த ஒரு ரூபாய்க்களை கையகப்படுத்தி, உருக்கி ப்ளேடு செய்து ஏற்றுமதி செய்து லாபம் கொள்கின்றனர். இன்னும் என்னென்ன எல்லாம் நடக்கிறதோ..
-..
அடுத்த பதிவிற்கும் இதே போட்டோ தான். பதிவின் பெயர் டெக்ஸாஸ்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நாணயம், அஞ்சல் தலை சேகரிப்பு என்பது என் சிறுவயது ஆசை. இன்னும் வைத்திருக்கிறேன் அவற்றை. பிறகு சிங்கபூர், மலேசியா தாய்லாந்து என அங்கு சென்ற வந்து போது அந்த நாடுகளின் நோட்டுகள், இப்போது கனடா மற்றும் அமெரிக்க பணம் மற்றும் காசுகள் என... கடைசியா 50 'குவாட்டர்'-களும் என் கையில்.
PicPerfectionist (புது பட்டம்) கீர்த்தி, மெசேஜ் சூப்பர் !! ஆனா போட்டோ வில் லேப்டாப் தெரிகிறதே.. ! ;-)
Post a Comment